இலக்கியத்தில் ஆறு (ஏடகம் மகளிர் முற்றம் சொற்பொழிவு)



ஏடகம் மகளிர் முற்றம் நடத்திய  இணையவழி கூட்டம் (8) 26/10/2024 அன்று மாலை 06/30 மணிக்கு  தொடங்கி நடைபெற்றது. மலையிலிருந்து அழகாகப் பாய்ந்து வரும் அருவிபோல அதிலிருந்து ஓடி வரும் ஜீவ நதி போல தன்னுடைய பேச்சால் அனைவரையும் ஈர்த்தார்.

 முனைவர் அரங்க மல்லிகா அவர்கள் தொல்காப்பியம் தொடங்கி இன்றைய இலக்கண  இலக்கியங்கள் வரை உள்ள ஆறுகளின் சிறப்புகளைத் தனது அனுபவ நிகழ்வுகள் வாயிலாகப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.


மகடூஉ என்பதன் பொருள்

முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை 

என்று இலக்கியம் குறித்து ஆரம்பித்தார்.


 தற்போது ஆறுகளின் வளம் குறைந்து வருவதையும், ஆற்றில் இருந்து  மணல் எடுப்பதன்  மூலம் அதன் நிலை உரு மாறியுள்ளதையும் கூறினார்.


 தென்னிந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் பட்டியலிட்டு அதன் பிறகு வட இந்திய நதிகள் குறித்தும் பேசினார்.


 சில நாட்களுக்கு முன்பு  கார் பயணத்தின் போது ஆற்றின் அருகே வாகனத்தை நிறுத்தி ஆற்றின் அழகினைக் கண்டு வியந்ததையும், ஆற்றில் இறங்கி மகிழ்ந்ததையும் 

அதனால் தான் தலைப்பு கேட்டதும் உடனே "இலக்கியத்தில் ஆறு" என்ற தலைப்பு கொடுத்ததையும் கூறினார்.


 மலையில் இருந்து உருவாகி ஓடி வரும் ஆறு விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக இருப்பதையும் கூறி ஆறு என்றாலே ஆற்றுப்படுத்துதல் என்று தகுந்ததோர் விளக்கம் கொடுத்தார்.


 சிலப்பதிகாரத்தில் கோவலனையும்,கண்ணகியையும் மாதவியையும் இணைக்கும் முக்கிய புள்ளியாக ஆறு உள்ளது.


 கலிங்கத்துப் பரணியில் காட்டப்பெறும் ஆறுகளில் செந்நீர் ஓடியதையும் குறிப்பிட்டார்.


காவிரி ஆறு, இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. 

 

காவிரியின் துணை ஆறுகள்: பவானி , அமராவதி, நொய்யல், கபினி,  போன்றவை. 

 

காவிரியின் கிளை ஆறுகள்: கொள்ளிடம், வெண்ணாறு, அரசலாறு போன்றவை. 

 

சங்கத் தமிழர் கண்ட ஆறும் ஊரும் இங்குப் பாடுபொருட்களாக அமைகின்றன. தமிழர் வாணிகத்தில் மேலோங்க முக்கிய காரணமாக ஆறு அமைந்துள்ளது என்று மேலும் பற்பல செய்திகளை வடக்கே சிந்துநதி முதல்தெற்கே தாமிரபரணி வரை கூறி இலக்கியத்தில் ஆறு என்ற தலைப்பில் இனிய உரை நிகழ்த்தினார்...  நமது சிறப்பு பேச்சாளர். சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் (ஓய்வு) முனைவர் அரங்க மல்லிகா அவர்கள் . நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் கவிஞரும் எழுத்தாளருமாகிய மாலதி திரு என்கிற சுமதி அவர்கள் . முன்னதாக வரவேற்புரையை ஏடகம் சுவடியியல் மாணவி திருமதி சோலைமுத்து அவர்கள்  சிறப்பாக வழங்கினார் கலந்து கொண்ட அனைவருக்கும்   ஏடகம் சுவடியியல் மாணவி திருமதி பொன்னரசி தில்லான் அவர்கள் நன்றி கூறினார். 


Post a Comment

0 Comments