தமிழக நாணயவியல் அறிஞர் திரு ஆறுமுக. சீதாராமன் தமிழகக் காசுகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான காசுகளின் அமைப்பு, மதிப்பு, வடிவம், மொழி உள்ளிட்ட பல சிறப்புக்கூறுகளை எடுத்துக்கூறினார்.
முன்னதாக திரு வீரமணி வரவேற்புரையாற்றினார். புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தைச் சார்ந்த பி.ஜெயலட்சுமி நன்றி கூறினார். ஏடகம் நிறுவனர் திரு மணி.மாறன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அறிஞர் பெருமக்களும், மாணவர்களும், பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
1 Comments
சிறப்பான விழா
ReplyDelete