ஞாயிறு முற்றம் : 8 ஜுலை 2018

ஞாயிறு முற்றத்தின் 10ஆம் நிகழ்வு 8 ஜுலை 2018 மாலை ஏடகம் வளாகத்தில் நடைபெற்றது. முந்தைய நிகழ்வுகள் வரலாறு, இலக்கியம் என்ற நிலையில் அமைந்திருந்த நிலையில் இந்நிகழ்வு சற்றே மாறாக அமைந்திருந்தது. 


நகைச்சுவைத்திலகம் முனைவர் இரா.குருநாதன் நோயற்ற வாழ்விற்கு சிரிப்பே மகிழ்ந்து என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் உரையாற்றினார் என்பதைவிட பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார் என்று கூறலாம். பார்வையாளர்கள் அனைவரும் தம்மை மறந்து வாய்விட்டுச் சிரிப்பதைக் காணமுடிந்தது. பரபரப்பான இவ்வுலகிற்குத் தேவை என்பதை அவருடைய பேச்சு உணர்த்தியது. வாழ்க்கையை இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும், அதே சமயம் நகைச்சுவை உணர்வினை அனைவரும் கொண்டிருக்கவேண்டும் என்று அவர் கூறியவிதம் சிறப்பாக அமைந்திருந்தது.

வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்த அவருடைய சிரிப்பான, அதே சமயம் சிந்தனையை எழுப்பிய உரையை அனைவரும் நன்கு ரசித்துக் கேட்டனர். அனைவரிடமும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்றும், அதை நாம் வெளிப்படுத்தவோ, பகிர்ந்துகொள்ளவோ தவறிவிடுகிறோம் கூறிய அவர், நம் வாழ்நாளில் அனைத்து நிலைகளிலும் நம்மைச் சுற்றி இவ்வாறான நகைச்சுவைச் செயல்கள் ரசிக்கத்தக்க வகையில் பரந்து இருப்பதை உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். 

முன்னதாக பா.விஜி வரவேற்றார். இறுதியில் கோ.ஜெயலட்சுமி நன்றி கூறினார். கோபி.கிருஷ்ணன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.
வரவேற்புரை: பா. விஜி 


சிறப்புரை: முனைவர் இரா.குருநாதன்

நன்றியுரை: கோ.ஜெயலட்சுமி

நிகழ்ச்சித்தொகுப்பு: கோபிகிருஷ்ணன்


Post a Comment

1 Comments

  1. முனைவர் இரா . குருநாதன் ஐயா அவர்களின் நகைச்சுவை உரையினைக் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

    ReplyDelete